தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) வரை.,
கொரானோ… வண்டிகள் ஓடவில்லை.
மின்கலங்கள் சார்ஜ் குறைகிறது.
இஞ்சினை ஓடவிட்டால் டீசல் குறைகிறது.,
யாரோ ஒருவருக்கு மூளையில் உதித்தது.
“Quick charger”
பேட்டரியை குப்பற கவுத்து…
புது Acid ஐ ஊத்து.
Quick chargerல போடு.
கிளைகளில் சொந்தபணத்தை போட்டு மோட்டர் வாங்கி அதை ரெண்டு ஆல்டர்நேட்டரோட இணைத்து அதிலிருந்து பேட்டரியெ சார்ஜ் பண்றது.
“பாதி பேட்டரி அவுட்டானது தான் மிச்சம்.”
இப்ப என்னடாண்ணா.
பொதுவாக பேருந்துகளில் உபயோகப்படுத்துவது 21Plate150ah ன்னு நினைக்கிறேன்.
அதற்கான பேட்டரி பாக்ஸ்கள் தான் வண்டியில் உள்ளது.
ஆனால் வந்திறங்கிய பேட்டரி 25Plate180ah.
“அளவு பெரியது.”
வண்டியில் உள்ள பெட்டியில் வைக்க முடியாது.
தற்போது புதிய அளவில் பெரிய பேட்டரிகளை வைக்க “செருப்புக்கேற்றபடி காலை வெட்டுவதை போன்று” பேருந்து பேட்டரி பாக்ஸ்களை சீரமைக்க திட்டமிட்டுள்ளனர்.
– Muthusamy Rakkiannan