TNSTC to procure 2000 BS6 Buses and 500 Electric Buses – TN Intermediate Budget

TNSTC to procure 2000 BS6 Buses and 500 Electric Buses in Phase 1 out of 12,000 Buses – TN Intermediate Budget 2021

TNSTC to procure 2000 BS6 Buses and 500 Electric Buses – TN Intermediate Budget

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் 

2,000 மின்சார பேருந்துகள் உட்பட 12,000 புதிய பேருந்துகள் தமிழ்நாடு துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவிப்பு.
Deputy CM of Tamilnadu Mr. O.Paneerselvam announced that 12,000 New Buses including 2,000 Electric Buses will be procured for TNSTC(s).
 
அடுத்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இரண்டாயிரம் மின்சாரப் பேருந்துகள் உட்பட 12,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என துணை முதல்வர் ஒ பன்னீர் செல்வம் தனது பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.
 
தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், சென்னை கலைவானர் அரங்கில் துணை முதல்வர் ஒ பன்னீர் செல்வம் இன்று தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
 
தமிழ்நாட்டில் அடுத்த சில ஆண்டுகளில் 12,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்தார்.
 
இந்த 12,000 பேருந்துகளில் 2,000 பேருந்துகள் மின்சாரப் பேருந்துகளாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். ரூ1,580 கோடி செலவில் மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படுவதாக அவர் கூறினார். முதல்கட்டமாக 2,000 பிஎஸ் 6 பேருந்துகள் மற்றும் 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
 
12,000 New Buses includes 2000 Electric Buses will be procured for TNSTC under the agreement of C40 and with financial assistance of KFW, Germany.
As first phase, Around 2000 BS6 Buses and at cost of 1,580 Crores 500 Electric Buses will be procured shortly.
 
தொகுப்பு,
TNSTC Enthusiasts