14,215 Special Buses to be operated by TNSTC(s) for Tamilnadu Assembly Elections 2021
தமிழகத்தில் தேர்தலுக்காக 14,215 சிறப்பு பேருந்துகள் - போக்குவரத்துத் துறை அறிவிப்பு

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வெளியூர்களில் தங்கி வேலை செய்பவர்கள் சொந்த ஊர்களுக்கு வாக்களிக்கச் செல்ல ஏதுவாக ஏப்ரல் 1 முதல் 5ஆம் தேதிவரை 5 நாட்களுக்கு சென்னையில் இருந்து தினசரி 3,090 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. கோவை, திருப்பூர், சேலம், பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்தும் பல்வேறு பகுதிகளுக்கு 2,644 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
பண்டிகை நாட்களில் செயல்படுவது போல சென்னையில் 5 இடங்களில் இருந்து இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கோயம்பேடு, மாதவரம், கேகே நகர், பூந்தமல்லி தாம்பரம்(மெம்ப்ஸ், ரயில் நிலையம்) ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படவுள்ளன
- மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் – செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை வழித்தட பேருந்துகள்.
- Madhavaram MIBT – Buses Towards Redhills, Ponneri, Gummidipundi.
- கே.கே நகர் பேருந்து நிலையம் – ECR வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் வழித்தட பேருந்துகள்.
- K.K Nagar Bus Stand – Buses Towards Pondy, Cuddalore, Chidhambaram on ECR.
- தாம்பரம் அறிஞர் அண்ணா (MEPZ) பேருந்து நிலையம் – திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் வழித்தட பேருந்துகள்.
- Tambaram Arignar Anna MEPZ Bus Stand – Buses Towards Thindivanam, Vikkiravandi, Panruti to Kumbakkonam, Thanjavur.
- தாம்பரம் இரயில் நிலைய பேருந்து நிலையம் – திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, செஞ்சி, சேத்துப்பட்டு, போளூர், வடலூர், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், புதுச்சேரி வழித்தட பேருந்துகள்.
- Tambaram Railway Staion Bus Stand – Buses Towards Tiruvannamalai, Gingee, Chethupattu, Polur, Vadalur, Panruti, Neyveli, Chidhambaram, Kattumannarkovil, Pondy Via, Thindivanam.
- பூந்தமல்லி பேருந்து நிலையம் – ஆரணி, ஆற்காடு, காஞ்சிபுரம், வேலூர், திருத்தணி, திருப்பத்தூர், ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி வழித்தட பேருந்துகள்.
- Poonamalle Bus Stand – Buses Towards Arani, Arcot, Kanchipuram, Vellore, Tiruthani, Tirupatthur, Hosur, Krishnagiri, Dharmapuri.
- கோயம்பேடு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் – மேலே குறிப்பிட்ட பேருந்து வழித்தடங்களை தவிர கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கரூர், திருச்சி, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, செங்கோட்டை வழித்தட பேருந்துகள்.
- Koyambedu Puratchi Thalaivar MGR Bus Stand (CMBT) – Except all routes mentioned above, buses to Coimbatore, Salem, Erode, Tirupur, Karur, Trichy, Madurai, Ramanathapuram, Tirunelveli, Nagercoil, Tuticorin, Shencottai.
Team, TNSTC Enthusiasts