SETC Installed UV based Disinfection Devices in 20 Airconditioned Buses as Pilot Basis

SETC Installed UV based Disinfection Devices in 20 Airconditioned Buses as Pilot Basiss | Exclusive Cover by TNSTC Enthusiasts

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் புதிய புற-ஊதா கதிர் கிருமி நீக்க பாதுகாப்பு சாதனத்தை சோதனை முறையில் 20 குளிர்சாதனப் பேருந்துகளில் பொருத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் புதிய கிருமி நீக்க பாதுகாப்பு சாதனத்தை சோதனை முறையில் 20 குளிர்சாதனப் பேருந்துகளில் பொருத்தியுள்ளது.

இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் திரு. இளங்கோவன் அவர்கள் கூறுகையில், தற்போது கொரோனா தொற்று தமிழகத்தில் அதிகரித்து வருகிறது மேலும் கோடை வெயிலின் தாக்கத்தால் குளிர்சாதனப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
 
பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, JTEC நிறுவனத்தின் (பேருந்து குளிர்சாதன கருவி உற்பத்தி நிறுவனம்) புதிய கிருமி நீக்க கருவியை சோதனை முறையில் சில பேருந்துகளில் பொருத்தியுள்ளோம்.
 
இந்த கருவி ஏற்கனவே உள்ள குளிர்சாதன கருவி உடன் பொருத்தபப்படும், பேருந்தில் குளிர்சாதனம் இயங்கும் பொழுது பேருந்தில் உள்ளே உள்ள காற்று, குளிர்விக்கப்பட வடிகட்டியை (AC Recirculation Filter) கடந்து குளிர்சாதன குழல்களை (AC Refrigeration Coil) அடையும் முன்னர் புற-ஊதா கதிர்களை (Ultraviolet light) கொண்டு கொரோனா (COVID 19) உட்பட அனைத்து வகையான நுண் கிருமிகளை அழித்துவிடும்.
 
இந்த கருவி ஒன்றன் விலை சுமார் 40,000/- ரூபாய். தற்போது 20 பேருந்துகளில் பொருத்தியுள்ளோம், இதன் செயல்பாடுகளை ஆய்வு செய்து விரைவில் அனைத்து குளிர்சாதனப் பேருந்துகளிலும் இந்த புற ஊதா கிருமி நீக்க கருவி பொருத்தப்படும் என TNSTC Enthusiasts குழுவினரிடம் தெரிவித்தார்.
 
மேலும், பேருந்து உள்ளே காற்றின் தூய்மை, தன்மை, வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் போன்றவற்றை உடனுக்குடன் காணும் வகையில் (Display) திரை பேருந்து உள்ளே அமைக்கப்பட்டுள்ளது.
 

“இத்தகைய தொழில்நுட்பம் மேலைநாடுகளில் அனைத்து குளிர்சாதனப் பேருந்துகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.”

எனினும், பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்ய தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் இந்த முயற்சியை மேற்கொண்டதற்கு அரசுப் போக்குவரத்து ஆர்வலர்கள் குழுவின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.
 
பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவோம்! முகக்கவசம் அணிவோம்.
 
SETC has installed 20 Ultra Violet based Disinfection devices to its air-conditioned buses as Trial.
These UV Disinfection devices were designed by JTEC, they are already supplying bus air-conditioners through out the country. This system has a UV Light setup in the Air- Recirculation Filter at mid roof of bus. Where UV kills all micro-organisms in the air.
A separate UI display connected to this system will display Quality of AIR, Humidity, Temperature etc., instantly.
This ensures the passenger’s safety. Though this system is already in western countries, SETC’s first step on this installation is really appreciable.
We would like to thank SETC Management on behalf of TNSTC Enthusiasts.
Use Public Transport As Much As Possible! Wear Mask During Travel!
 

Team, TNSTC Enthusiasts

ULTRA DELUXE, A/C SLEEPER, A/C SEATER cum SLEEPER, A/C SEATER, Non A/C SLEEPER, Non A/C SEATER cum SLEEPER


Ticket Booking App