COVID-19
Tamilnadu's Inter-Zonal Train Travelers Hand Book
TNSTC & Rail Based Inter Zonal People Emergency Movement TNSTC Enthusiasts_V1.1கடந்த ஜூன் 1 முதல் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் அரசால் பிரிக்கப்பட்ட அதன் மண்டலங்களுக்குள் பேருந்துகள் இயங்குகிறது.
இத்தருணத்தில் அரசுப்பேருந்து ஆர்வலர்கள் குழு ஓரு மண்டலத்திலிருந்து மற்றொரு மண்டலத்திற்கு அத்தியாவசிய பயணங்களை பயணிகள் இரயில் மூலம் மேற்கொள்ளவதற்கான பிரத்தியேக கையேட்டை தயாரித்துள்ளோம்.
அந்தந்த மண்டலத்தில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களையும் தற்போது 50% பேருந்துகள் இணைக்கிறது. முக்கிய இரயில் நிலையங்களும் இதில் அடங்கும்.
ஆகவே தங்கள் அத்தியாவசிய பயணத்தை திட்டமிட்டு உங்கள் ஊர் முதல் ரயில் நிலையம் வரை அரசுப் பேருந்துகளில் தகுந்த சமூக இடைவெளியுடன் பயணிப்பது சிறப்பு.

COVID-19 Bus Transit Operative Guidelines
வணக்கம் நண்பர்களே!
விரைவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை, அரசுப் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் நம் குழுவின் ஒரு புதிய முயற்சியாக,
“கொரோனா” தொற்று பரவாமல் பேருந்துகளை இயக்க உலகலாவிய பல்வேறு வழிமுறைகளை ஆலோசனைகளாக தொகுத்து “தமிழில்” கையேடாக வழங்கியுள்ளோம்.
இந்த வழிமுறைகள் ஓட்டுநர், நடத்துநர் மட்டுமல்லாது பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு வகுக்கப்பட்டது.
அனைவரும் படித்து பயன்பெறவும்!
Team,
TNSTC Enthusiasts
